விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் - 33 ராணு வீரர்கள் பலி
கிளிநொச்சி: கிளிநொச்சியில் ராணுவத்தினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 33 ராணுவத்தினர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என ராணுவம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியைப் பிடிக்க ஆறு முனைத் தாக்குதலில் ராணுவம் இறங்கியுள்ளது. இதை சமாளிக்க கண்ணிவெடித் தாக்குதலில் விடுதலைப் புலிகள் இறங்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு தோதாக இல்லாத பகுதிகளில் ராணுவத்தினரை முன்னேற அனுமதிக்கும் புலிகள், அவர்களை கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குள் முன்னேற விட்டு தாக்குகின்றனர்.
இதன் காரணமாக ராணுவம் நிலைகுலைந்துள்ளது. நச்சிக்குடா பகுதியில், கடந்த 48 மணி நேரங்களில் புலிகள் நடத்திய கண்ணி வெடி உள்ளிட்ட தாக்குதல்களில் 33 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை, 40 பேர் காயமடைந்திருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைத்துள்ள மூன்றடுக்கு தடுப்பரண்தான் ராணுவத்தினருக்கு பெரும் எமனாக அமைந்துள்ளது. கார்கில் போரின்போது இந்தியா இதே முறையைத்தான் பயன்படுத்தியது (இந்த தடுப்பரண் குறித்து நாம் ஏற்கனவே விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம்) என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ராணுவத் தாக்குதலை முறியடிக்க தனது படைப்பிரிவில் உள்ள சிறந்த வீரர்களை போர் முனைகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் மழை பெய்து வருவதால் ராணுவம் முன்னேறுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது புலிகளுக்கும்சற்று பாதகத்ைத ஏற்படுத்தியுள்ளது. களிமண்ணால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பரண்கள் ஆங்காங்கே கரையத் தொடங்கியிருப்பதால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் பல மைல் தொலைவுக்கு உள்ள தடுப்பரண்களை தாண்டி ராணுவம் வர முடியாததால், தற்போதைக்கு இப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கை ஓங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
--
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications