கன மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதால்தொடர்ந்து மழை இருந்துவருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரைஅனைத்துப் பகுதிகளிலும் கன மழை வெளுத்துக் கட்டியது. இதன் காரணமாக தமிழகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இயல்பு வாழ்க்ைக பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
ஏரி, குளங்கள் உடைப்பு:
பல பகுதிகளில் ஏரிகள், கண்மாய்கள், குளங்களில் உடைப்பெடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது. சாலைகள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் வேளச்சேரி, ராம் நகர், மடிப்பாக்கம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கி மக்களை பெரும் பாதிப்பில் ஆழ்த்தியுள்ளது.
உதக மண்டலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பல குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.
காஞ்சிபுரம், கடலூர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே பலத்த மழை பெய்து வருவதால் அங்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உப்புத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மழை மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை:
கன மழை காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது.
நெல்லை - வயல்கள் மூழ்கின:
நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடியாக உயர்ந்தது. பல இடங்களில் வயல்கல் நீரில் முழ்கின.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்மழைக்கு இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். 300 ஹெக்டர் பரப்பிளவிலான வாழை பயிர்கள் சேதமடைந்துள்ளன.
குளிருக்கு 2 பேர் பலி:
நெல்லை மாவட்டத்தில் இரவிலும் தொடர் மழை பெய்வதால் கடும் குளிருக்கு இருவர் பலியாகி உள்ளனர்.
ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டு 4-வது பிளாட் பாரத்தில் 50 வயது மதிக்கத்தக்க பிச்சைக்காரர் ஒருவர் இரவு படுத்து தூங்கினார். நேற்று அவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் ஜங்ஷன் போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதேபோல் த.மு. ரோட்டில் படுத்திருந்த ஒருவரும் இறந்து கிடந்தார். விசாரணையில் அவர் நாசரேத் அருகே உள்ள வைத்திலிங்கபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பது தெரிய வந்தது.
நீரில் மூழ்கிய பயிர்கள்:
திருச்சி, தஞ்சை, கரூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பொழியும் கடும் மழை காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications