மக்கள் துரத்தல்..கிணற்றில் விழுந்து திருடன் பலி
சென்னை: பொதுமக்கள் திரண்டு வந்து துரத்தியதால், பதட்டமடைந்து தாறுமாறாக ஓடிய திருடன், கிணற்றில் விழுந்து உயிரிழந்தான்.
சென்னை புறநகரான பல்லாவரம் ராஜாஜி நகர் ஆச்சாரி தெருவில் வசித்து வருபவர் சுப்புராயன். நேற்று இரவு 11 மணியளவில் இவரது வீட்டின் சுற்றுச் சுவர் ஏறி மர்ம ஆசாமி ஒருவன் உள்ளே குதித்தான். இதனை சுப்புராயன் பார்த்து விட்டார்.
உடனே திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். பொதுமக்கள் திரண்டு விட்டதால் அரண்டு போன திருடன், அங்கிருந்து ஓடினான். அவனை பொதுமக்கள் விடாமல் துரத்தினர்.
இதனால் திருட்டு நபர் தாறுமாறாக ஓடியதில், அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து விட்டான். அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்னர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து அந்த நபரின் உடலை நீண்ட நேரம் போராடி மீட்டனர்.
விசாரணையில் கொள்ளையடிக்க வந்த நபரின் பெயர் ரவிக்குமார் என்பதும், மல்லிகா நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. ரவிக்குமார், தனியார் கல்லூரியில் டிரைவராக இருந்துள்ளார். அப்போது டீசல் திருடியதால் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவராம்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications