சங்கரன்கோவில்-நாட்டாண்மை மனைவி படுகொலை
சங்கரன்கோவில்: சங்கரன் கோவில் அருகே நாட்டாண்மை மனைவி வெட்டிக் கொல்லப்பட்டார்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள மறுக்காலன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகையா. ஊர் நாட்டாண்மையாக இருந்த இவர் தற்போது கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராமாத்தாள்.
இவர்களுக்கு சமுத்திரகனி, மணித்தாய் ஆகிய மகள்களும், சமுத்திரபாண்டியன் என்ற மகனும் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. சமுத்திரபாண்டியன் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
ஊரில் தனியாக வசித்து வந்த ராமாத்தாள், தெற்குபனவடலிசத்திரத்தில் உள்ள மாயன்பெருமாள் என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.
காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற ராமாத்தாள் இரவு வெகுநேரமாகியும் வீடுதிரும்பவில்லை. இதனால் அவரது இளையமருமகன் வெள்ளத்துரை மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மாயன்பெருமாள் தோட்டத்திற்கு சென்றவர்கள் அங்கு ராமாத்தாள் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் எஸ்பி ஆஸ்ரா கர்க், டிஎஸ்பி (பொறுப்பு) அசோக்குமார், பனவடலிசத்திரம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் விரைந்து விசாரணை நடத்தினர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications