சந்த்ராயன் விண்கலத்துடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி

ஏவப்பட்ட 1,102வது வினாடியில் சந்த்ராயன் விண்கலத்தை அதற்கு உரிய பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது பிஎஸ்எல்வி.
சந்த்ராயன் விண்கலம் சிறப்பாக இயங்குவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவின் அனைத்து தரைக்கட்டுப்பாட்டு மையங்களும் அதன் சிக்னல்களை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் நிலாவை அடையும் இந்தியாவின் பயணத்தில் முதல் அடி மிக வெற்றிகரமாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளித் தளத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.
இப்போது பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது சந்த்ராயன். நீள்வட்டப் பாதை என்பதால் இந்த விண்கலத்துக்கும் பூமியிலிருந்து இடையிலான குறைந்தபட்ச தூரம் (perigee) 250 கி.மீயாகவும் அதிகபட்ச தூரம் (apogee) 23,000 கிமீ ஆகவும் இருக்கும்.
இதையடுத்து சந்த்ராயன் விண்கலத்தில் உள்ள சிறிய ராக்கெட்டுகளை இயக்கி அதை பூமியிலிருந்து மேலும் தூரத்துக்கு தள்ளுவர் விஞ்ஞானிகள். இந்த ராக்கெட்டுகள் தரைக்கட்டுப்பாட்டு நிலையம் மூலமாக, ரேடியோ சிக்னல்கள் மூலம் இயக்கப்படும்.
ராக்கெட்டுகள் இயங்க இயங்க ஒரு கட்டத்தில் இந்த விண்கலத்துக்கும் பூமிக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 37,000 கி.மீயாகவும் அதிகபட்ச தூரம் 73,000 கி.மீயாகவும் அதிகரிக்கும்.
மேலும் ராக்கெட்டுகளை இயக்கி இயக்கி இதன் சுற்றுப்பாதை பூமியிலிருந்து 3,87,000 கி.மீயாக உயர்த்தப்படும். இவையெல்லாம் 11 நாட்களில் நடந்து முடியும்.
அப்போது நிலவின் ஈர்ப்பு விசையால் சந்த்ராயன் ஈர்க்கப்பட்டு அதன் சுற்றுப் பாதையில் சுற்ற ஆரம்பிக்கும். இதையடுத்து நிலவுக்கும் சந்த்ராயனுக்கும் இடையிலான தூரம் 100 கி.மீயாக குறைக்கப்படும்.
1,380 கிலோ எடையுள்ள சந்த்ராயன்-1 விண்கலம் அடுத்த இரண்டாடுகள் நிலவை 100 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.
18 நாட்களுக்குப் பின், நவம்பர் 8ம் தேதி, நிலவுக்குள் ஒரு துணை வி்ண்கலத்தை சந்த்ராயன் செலுத்தும். அது நம் தேசியக் கொடியை நிலவில் நாட்டும்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications