தமிழக எம்பிக்கள் அமளி-அவைகள் ஒத்திவைப்பு
டெல்லி: இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிடக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நேற்று தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
மக்களவை கூடியதும் முதலில் கேள்வி நேரம் தொடங்குவதாக சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அறிவித்தார். அப்போது பாமகவைச் சேர்ந்த எம்பிக்கள் எழுந்து, இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்களுக்கு திமுக எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் சபாநாயகர் இருக்கையை நோக்கி அவர்கள் சென்றனர். சபையின் மையப்பகுதியில் நின்று கோஷமிட்டனர்.
அப்போது மும்பையில் வட இந்தியர்கள் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சியினரும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜ்யசபாவில்...:
அதே போல ராஜ்யசபாவிலும் இலங்கை பிரச்சினை எழுப்பப்பட்டது. அவை கூடியதும் இலங்கை தமிழர் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக, பாமக எம்பிக்கள் வலியுறுத்தினர்.
தமிழர்களை காப்பாற்றுங்கள்', இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை தடுத்து நிறுத்துங்கள்' என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களையும் அவர்கள் காட்டினர்.
அப்போது ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், பாஜக ஆகியவை மும்பை தாக்குதல் சம்பவத்தை எழுப்பியதால் அவையில் அமளி ஏற்பட்டது. எனவே, ராஜ்யசபாவும் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் மக்களவையில் நேற்றிரவு இலங்கை பிரச்சனை தொடர்பாக விரிவான விவாதம் நடந்தது. அதில் திமுக, பாமக எம்பி்க்கள் பங்கேற்றுப் பேசினர்.
இலங்கையில் போரை உடனே நிறுத்த வேண்டும், தமிழர்களுக்கு உடனே நிவாரணப் பொருட்கள் கிடைக்கச் செய்ய வேண்டும், இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவியை நிறுத்த வேண்டும், இலங்கை விமானப் படை பைலட்டுகளுக்கு பயிற்சியளிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என அவர்கள் கோரினர்.
இந்த விவாதம் நடந்தபோது திமுக, பாமக எம்பிக்கள் உள்பட வெகு சிலரே அவையில் இருந்தனர். இதனால் அவையே காலியாகக் காணப்பட்டது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications