2 இலங்கை கப்பல்கள் மீது புலிகள் தற்கொலை தாக்குதல்

வடக்குப் பகுதியின் தமிழ் மக்களுக்கு இந்தக் கப்பலில் உணவு, மருந்துகள் கொண்டு செல்லப்பட்டதாகவும், அதைத் தடுக்கவே புலிகள் தாக்கியதாகவும் இலங்கை கடற்படை கூறியுள்ளது.
ஆனால், இந்தக் கப்பல்களில் கடற்படையினரும் ஆயுதங்களும் கொண்டு செல்லப்பட்டதாக புலிகள் தரப்பு கூறுகிறது.
இலங்கையின் வடக்குக் கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.10 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்தது. ருகுனா, நிமலவா என்ற இரு கப்பல்களையும் 3 படகுகளில் வந்த தற்கொலைப் படை புலிகள் தாக்கினர்.
இதில் உடலில் குண்டுகள் கட்டியபடி வெடித்த விடுதலைப் புலி ஒருவர் பலியானார். இந்த வெடிப்பில் நிமலவா கப்பல் பெருத்த சேதமடைந்தது.
இதையடுத்து கப்பலுக்கு பாதுகாப்பாக அதில் சென்ற கடற்படையினர் நடத்திய தாக்குதலில் படகுகளில் இருந்த புலிகள் கொல்லப்பட்டதாகவும், ஒரு படகு கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
அந்தக் கப்பல்களில் வட பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு உணவும், மருந்துகளும் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதைத் தடுக்கும் விதத்திலேயே புலிகள் தாக்கியதாகவும் கடற்படையின் செய்தித் தொடர்பாளரான திஸ்ஸநாயகே கூறினார்.
ஆனால், அந்தக் கப்பல்களில் கடற்படையினரும் ஆயுதங்களுமே இருந்ததாக புலிகள் தரப்பு கூறுகிறது.
கப்பல் சேதமடைந்ததில் ஏதாவது உயிர்ப் பலி ஏற்பட்டதா என்பது குறித்து கடற்படை தரப்பில் தகவல் இல்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications