மின்வெட்டு: கண்டித்து 6 லட்சம் சிறு தொழிற்சாலைகள் இன்று கதவடைப்பு!!
சென்னை: மின்வெட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள 6 லட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் இன்று கதவடைப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
தமிழகத்தில் 78 தொழிற்பேட்டைகளில் ஏராளமான சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இவற்றின் உற்பத்திதான் மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
குறுந்தொழில் நிறுவனங்களில் உரிமையாளர் தவிர ஓரிருவர் மட்டுமே பணியாற்றுவார்கள். எனவே, தங்கள் வேலைக்கு ஏற்ப எந்த நேரத்திலும் அந்த நிறுவனங்கள் இயங்கும்.
இப்போது 10 மணி நேரம் வரை மின்வெட்டு இருப்பதால், குறுந்தொழில்கள் கடுமையாக பாதித்துள்ளன. திருப்பூர் மற்றும் மதுரையில் ஆயிரக்கணக்கான குந்தொழில் நிறுவனங்கள் உள்ளன.
நாமக்கல் மற்றும் கோவை பகுதியில் மோட்டார் பம்ப், பவுண்டரீஸ் நிறுவனங்களும் கடுமையாக பாதித்துள்ளன.
இதனால், மின்வெட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 6 லட்சம் நிறுவனங்களும் இன்று ஒரு நாள் கதவடைப்பு செய்கின்றன. இதனால், 50 லட்சம் பேர் சம்பளம் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை இழக்கின்றனர்.
தமிழ்நாடு சிறு, குறுந்தொழில் சங்க (டான்ஸ்டியா) தலைவர் காந்திகுமார் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின்தட்டுப்பாடு காரணமாக, சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை இன்னும் ஒரு மாதம் நீடித்தால், ஆயிரக்கணக்கான சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும்.
மின்வெட்டு காரணமாக தொழிற்சாலைகள் இயங்காத நாட்களில், தொழிலாளர்களுக்கு சம்பளத்தை ரத்து செய்ய தொழில் நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.
அலுமினியம் உருக்காலை, பிளாஸ்டிக் வார்ப்பாலை ஆகியவற்றுக்கு தொடர்ந்து மின்சாரம் தேவை. இந்த வகையான சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். சிறு, குறுந்தொழில் உரிமையாளர்கள் வாங்கும் ஜெனரேட்டர்களுக்கு 50 சதவீத மானியம் தரவேண்டும்.
தொழிற்சாலைகளின் ஜெனரேட்டர் தேவைகளுக்கு, எஸ்ஸார் என்ற தனியார் நிறுவனத்தில் வாங்கும் டீசலுக்கு மட்டுமே மதிப்புக்கூட்டு வரி திரும்பத் தரப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
ஆனால், எஸ்ஸார் நிறுவனத்துக்கு மதுரை போன்ற தென் மாவட்டங்களில் பெட்ரோல் நிலையங்கள் இல்லை. எப்படி டீசல் வாங்குவது என அங்குள்ள தொழிற்சாலைகள் தவிக்கின்றன. எனவே, பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் மூலம் தட்டுப்பாடின்றி டீசல் வழங்கவும், அதற்கான மதிப்புக் கூட்டு வரியில் சலுகைத் தொகையை உடனடியாக திரும்பப் பெறவும் வழி செய்ய வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறுதொழில் சங்கங்களும் நாளை கதவடைப்பு செய்ய முடிவெடுத்துள்ளன. இதனால், 6 லட்சம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்படும், என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications