பணவீக்கம் மேலும் குறைந்தது
டெல்லி: நாட்டின் பண வீக்கம் சற்று குறைந்துள்ளது. முந்தைய வாரமம் 11.44 சதவீதமாக இருந்த பண வீக்கம் ஆகஸ்ட் 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11.07 சதவீதமாக குறைந்துள்ளது.
உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை குறைந்ததால் பண வீக்கம் சற்றே தளர்ந்துள்ளது.
நடப்பு வாரத்தில் ,காய்கறிகள், பழங்கள், முட்டைகள் உள்ளிட்டவற்றின் விலை குறைந்துள்ளது. அதேபோல சூரிய காந்தி, பருத்தி உள்ளிட்டவையும் விலை குறைந்துள்ளன.
பங்குச் சந்தை இன்றும் சரிவு:
இதற்கிடையே மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 488 புள்ளிகள் சரிந்து மீண்டும் 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் இறங்கியது.
சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் காணப்படும் பின்னடைவு, எண்ணெய் விலை சரிவு மற்றும் சில நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியானதன் விளைவாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக பங்கு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று மாலை வர்த்தக நேர இறுதியில் 513 புள்ளிகள் குறைந்திருந்த சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 488 புள்ளிகள் குறைந்து 9,681 புள்ளிகள் ஆனது. தேசிய பங்குச் சந்தையிலும் நிப்டி குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 147 புள்ளிகள் குறைந்து 2,918 புள்ளிகள் ஆனது.
பார்தி ஏர்டெல், எல் அண்டு டி, ஆர்ஐஎல், ஐசிஐசிஐ பாங்க், ரிலையன்ஸ் இன்ப்ரா, எஸ்பிஐ, இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி, விப்ரோ, டாடா ஸ்டீல், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனங்களின் பங்கு விலைகள் நஷ்டத்தை சந்தித்தன.
வர்த்தக நேர முடிவில் 398 புள்ளிகள் குறைந்து 9771.70-ல் நிலைபெற்றது. நிப்டி 122 புள்ளிகள் குறைந்து 2943.15 ஆக இருந்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications