போலீசாருக்கு எதிரான 203 மனுக்கள் தள்ளுபடி
மதுரை: போலீசாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 203 மனுக்களை மதுரை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
குற்ற நிகழ்வுகள் மற்றும் புகார் மீது வழக்கு பதிவு செய்யப்படாதது போன்ற காரணங்களுக்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் 13 மாவட்டங்களில் இருந்து சுமார் 203 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி செல்வம் முன்னிலையில் நேற்று ஒரே நேரத்தில் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 156(3)ன் படி ஒரு புகார் மனு மீது வழக்கு பதிவு செய்யக் கோருபவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
அப்படியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டை அணுக வேண்டும். இந்த மனுக்கள் கீழ் கோர்ட்டை அணுகாமல் நேரிடையாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தவறு என்று கூறி மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications