ரூ. 196.37 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி - தமிழக அரசு
சென்னை: சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கியிருந்த ரூ. 196.37 கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் விவசாயக் கடன்தள்ளுபடி தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி பல்ேவறு விவசாய அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த முடிவை அமைச்சரவை எடுத்துள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை வளாகம் - திருத்த மதிப்பீடு
மேலும், சென்னை நகரில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜிஎம்பி இன்டர்நேஷனல் நிறுவனம் கட்டவுள்ள புதிய சட்டசபை வளாகத்திற்கான திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பீட்டுக்கும் நிர்வாக ரீதியிலான ஒப்புதலை அமைச்சரவை இன்று அளித்தது.
இ ஸ்டாம்பிங்
இதுதவிர போலி முத்திரைத்தாள் நடமாட்டத்தை ஒழிக்கும் வகையில், குறிப்பிட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் இ - ஸ்டாம்பிங் முறையை சோதனை ரீதியில் அமல்படுத்தவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்திய ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். பின்னர் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications