சங்கரராமன் கொலை வழக்கு-நவ21க்கு ஒத்திவைப்பு
புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கை நவம்பர் 21ம் தேதிக்கு புதுச்சேரி முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இன்று இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட 24 பேர் மீதும் குற்றச்சாட்டைப் பதிவு செய்வது தொடர்பாக அரசுத் தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் லட்சுமண ரெட்டி, வரதராஜன், பிரகாஷ் ஆகியோர், முன்பு பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களில் பல ஓட்டைகள் உள்ளன.
அனைவர் மீதும் ஒரே மாதிரியாக குற்றச்சாட்டைப் பதிவு செய்வதற்குப் பதில், ஒவ்வொரு குற்றவாளிக்கும் தனித் தனியாக குற்றச்சாட்டைப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸின் கருத்தை அறிந்த நீதிபதி, குற்றச்சாட்டை தனித் தனியாக பதிவு செய்ய ஒப்புக் கொண்டார். பின்னர் வழக்கு நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், நவம்பர் 21ம் தேதி ஜெயேந்திரர், விஜயேந்திரர், தில் பாண்டியன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 24 பேரும் தவறாமல் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது 24 பேரில் 13 பேர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications