ராஜுக்கு எதிராக பீகாரில் பந்த்- வன்முறை
பாட்னா: பீகாரில் இன்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அழைப்பு விடுத்திருந்த 24 மணி நேர பந்த்தின்போது மாணவர்கள் பெருமளவில் வன்முறையில் இறங்கினர்.
ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் தொடர்ந்த வட இந்தியர்களைத் தாக்கி வருவதைக் கண்டித்து 24 மணி நேர பந்த்துக்கு மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
இந்த பந்த்திற்கு பீகாரில் ஓரளவே ஆதரவு காணப்பட்டது. தர்பங்கா ரயில் நிலையத்தில் இன்று காலை புகுந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், ராஜ் தாக்கரே கட்சிக்கு எதிராக கோஷமிட்டபடி ரகளையில் இறங்கினர்.
ரயில்வே ஸ்டேஷன்மாஸ்டர் அறையை அவர்கள் அடித்து நொறுக்கினர். டிக்கெட் கவுண்டர்கள், பிளாட்பார்ம் ஷெல்டர்களையும் அவர்கள் தாக்கி சேதப்படுத்தினர்.
தீவைப்பிலும் அவர்கள் ஈடுபட முயன்றனர். ஆனால் ரயில்வே போலீஸார் குறுக்கிட்டு அவர்களைத் தடுத்து வெளியேற்றினர்.
போலீஸாரையும் மாணவர்கள் தாக்க முயன்றபோது போலீஸார் அவர்களை தடியடி நடத்தி விரட்டினர். 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். வன்முறையில் 4 பேர் காயமடைந்தனர்.
முன்னதாக டோனார் செளக் பகுதியில், சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலை மாணவர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ரயில் போக முடியவில்லை.
இதேபோல, மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் பேட்டியா என்ற இடத்தில், டெல்லி - முசாபர்பூர் இடையிலான சப்தகந்தி எக்ஸ்பிரஸ் ரயிலும் மறிக்கப்பட்டது.
பாலியா என்ற இடத்தில் உள்ள ரயில் நிலையத்தையும் மாணவர்கள் தாக்கி சேதப்படுத்தினர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை
தலைநகர் பாட்னாவில் அமைதி நிலவியது. மாநிலம் முழுவதும் பெரும்பாலும் அமைதி காணப்பட்டது. பெருமளவிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தலைநகர் பாட்னா உள்பட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வர்த்தகம் பாதிக்கப்படவில்லை. கல்வி நிறுவனங்களும் திறந்திருந்தன. பஸ் போக்குவரத்திலும் பாதிப்பில்லை. சாலைகளில் வழக்கமான போக்குவரத்து காணப்பட்டது.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்த இந்த பந்த்துக்கு லாலு பிரசாத் யாதவின்ஆர்.ஜே.டி, ஐக்கிய ஜனதாதளம், லோக் தந்த்ரிக் கட்சி உள்ளிட்டவற்றின் மாணவர் பிரிவுகள் ஆதரவு ெதரிவித்திருந்தன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications