போர் நிறுத்தம்-இந்தியாவுக்கு புலிகள் கோரிக்கை
சென்னை: இலங்கை ராணுவம் நடத்தி வரும் படுகொலையை தடுத்து நிறுத்தி, போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும் என விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பி.நடேசன் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஈழத்தில் நடக்கும் போரை உடனே நிறுத்த இலங்கை அரசுக்கு இந்தியா நெருக்கடி கொடுக்க வேண்டும். போரை நிறுத்தினால் மட்டுமே புலம் பெயர்ந்துள்ள அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும். இந்தியாவிடம் நாங்கள் எதிர்ப்பாக்கும் உதவி இது தான்.
ராஜபக்சே அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ரகசிய பேச்சு நடப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. போரை நிறுத்தாமல் நாங்கள் எப்படி பேச்சு வார்த்தைக்கு உட்கார முடியும். போர் தீவிரமாக நடக்கும் நிலையில், எமது மக்கள் காடுகளில் தஞ்சம் அடைந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நாங்கள் எப்படி பேச்சுவார்த்தைக்கு செல்வோம்?
கிளிநொச்சிக்குள் ராணுவம் வந்து விட்டதாக ராஜபக்சேவும், அவரது அகதிகாரிகளும் தவறான தகவலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாதக் கணக்கில் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது திடீ ரென கிளிநொச்சியை பிடிக்க சில மாதம் ஆகும் என்கிறார்கள்.
சிங்கள ராணுவம் வேண்டும் என்றே தமிழர்கள் குடியிருப்புகளை தாக்கி அழிக்கிறது. தமிழ் இனம் காக்கப்பட வேண்டுமானால், அது இந்தியாவின் கையில்தான் உள்ளது. போரை நிறுத்த இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் எதிர்க்கிறோம் என்று கோரியுள்ளார்.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications