சென்னை-ராமேஸ்வரம் புதிய ரயில்: பாண்டியன் எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை-ராமேஸ்வரம் இடையே நவம்பர் 1ம் தேதி முதல் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

மேலும் பொதிகை, பாண்டியன், நெல்லை, மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்துக்கு நவம்பர் 1 முதல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். இந்த ரயில் தினமும் எழும்பூரில் (எண் 6101) இரவு 7.55 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

ராமேஸ்வரத்தில் இருந்து தினமும் இந்த ரயில் (எண் 6102) மாலை 5 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6.40 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

இந்த ரயில் விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி வழியாகச் செல்லும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரும் ரயில் மாம்பலத்திலும் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

ரயில் நேரங்கள் மாற்றம்:

இந்த புதிய எக்ஸ்பிரஸ் ரயில் காரணமாக பொதிகை, நெல்லை, பாண்டியன், மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது.

பொதிகை எக்ஸ்பிரஸ் புதிய நேரம்:

சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் எழும்பூரில் இருந்து இரவு 8 மணிக்குப் பதிலாக இரவு 8.50 மணிக்குப் புறப்படும்.

இதேபோல், எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.50 மணிக்குப் பதிலாக
பாண்டியன் புதிய நேரம்:

எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் இரவு 9.15 மணிக்குப் பதிலாக இரவு 9.40 மணிக்கு புறப்படும்.

எழும்பூரில் இருந்து மங்களூர் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.40 மணிக்குப் பதிலாக இரவு 10 மணிக்குப் புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கந்தசஷ்டி: சென்னை-திருச்செந்தூர் சிறப்பு ரயில்:

இதற்கிடையே கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, சென்னை- திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் 2, 3 தேதிகளில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் (எண்கள் 0643, 0645) எழும்பூரில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும்.

திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு 3, 4ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில்கள் (எண்கள் 0644, 0646) திருச்செந்தூரில் இருந்து பகல் 1 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4.45 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

இந்த ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி, நெல்லை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+