இந்திய பங்குச் சந்தையில் தீபாவளி ஷாக்!
மும்பை: தீபாவளி தினமான நேற்று இந்திய பங்குச் சந்தைகளில் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்டு பின்னர் நிலைமை ஓரளவுக்கு சரியானது.
நேற்று வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 8,000 புள்ளிகளுக்குக் கீழே போனது. இதனால் பெரும் அதிர்ச்சியும் பீதியும் பரவியது.
பின்னர் ஒரு வழியாக சென்செக்ஸ் மேல்நோக்கி பயணித்து மாலையில் 8,509 புள்ளிகளுடன் முடிவடைந்தது. ஆனாலும் நேற்று மட்டும் சென்செக்ஸ் 191 புள்ளிகளை இழந்துவிட்டது.
கடந்த ஜனவரியில் தான் சென்செக்ஸ் இதுவரை இல்லாத உயரத்தைத் தொட்டது. 21,206 என்ற நிலையில் இருந்தது. இப்போது அது 12,697 புள்ளிகளை இழந்து 8,509 என்ற நிலைக்கு வந்துவிட்டது.
இது கிட்டத்தட்ட 60 சதவீத வீழ்ச்சியாகும். ஜனவரியில் 1000 ரூபாயாக இருந்த ஒரு பங்கின் மதிப்பு இப்போது வெறும் 40 ரூபாய் தான்.
இந் நிலையில் தீபாவளியையொட்டி இன்று பங்குச் சந்தையில் முகூர்த்த வர்த்தகம் நடக்கவுள்ளது. இன்று மாலை சில மணி நேரங்களே நடக்கவுள்ள இந்த வர்த்தகத்தி்ல் சென்செக்ஸ் என்ன ஆகுமோ என்ற அச்சம் பரவிக் கிடக்கிறது.
ஆனாலும், முகூர்த்த வர்த்தகம் என்பதால் சென்செக்ஸ் இழப்பை சந்திக்காது என்பதே பெரும்பாலான புரோக்கர்களின் கருத்தாக உள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications