ஜாமீன் கோரி ராமநாதபுரம் கோர்ட்டில் சீமான், அமீர் மனு
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர்கள் சீமானும், அமீரும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறி அவர்களை போலீஸார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்துள்ளனர்.
ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர் செய்தபோது இருவர் சார்பிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை என்று கூறி நிராகரித்து விட்டது.
இதையடுத்து இன்று இரு இயக்குநர்கள் சார்பிலும் ராமநாதபுரம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை வருகிற 31ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications