மும்பை-ஓடும் ரயிலில் உ.பி வாலிபர் அடித்து கொலை
மும்பை: மும்பையில் ஓடும் ரயிலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மேலும் 3 பேர் உயிர் தப்பியுள்ளனர்.
ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா அமைப்பினர் வட மாநிலத்தவர்களைத் தாக்குதவது தொடர்ந்து வருகிறது.
இந் நிலையில் மும்பை புறநகர் பகுதியான கோபோலியில் இருந்து சிஎஸ்டி ரயில் நிலையத்துக்கு மின்சார ரயிலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் பயணித்தனர்.
அப்போது 12 பேர் கொண்ட ஒரு கும்பல் அவர்களை சுற்றி வளைத்து கொலை வெறித் தாக்குதல் நடத்தியது. இதில் தரம் தேவ்ராய் என்ற வாலிபரின் மண்டை பிளந்துவிட்டது.
அப்போது பட்லபூர் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கவே 4 பேரும் அந்தக் கும்பலிடமிருந்து தப்பி கீழே இறங்கினர்.
தரம் தேவ்ராயை அவர்கள் மருத்துவமனையில் அனுமதி்த்தனர். ஆனால், சிகிச்சை பலனி்ன்றி அவர் இறந்தார்.
கொலையான வாலிபருடன் வந்த வீரேந்திர ராம் கோபால்ராய், சத்யபிரகாஷ் கெளஷல் ராய், சிவ்குமார் வர்மா ஆகிய மூவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள்.
மும்பை குர்லாவில் பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறி மிரட்டல் விடுத்த பிகார் வாலிபர் ராகுல் ராஜை போலீசார் சுட்டுக் கொன்ற அடுத்த நாள் இந்தக் கொலை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராகுல் ராஜ் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க மகாராஷ்டிர மாநில அரசின் தலைமைச் செயலாளர் ஜானி ஜோசப் தலைமையில் உயர்நிலைக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications