திருச்சியில் கோஷ்டி மோதல்: 15 பேர் காயம்- 35 பேர் கைது
திருச்சி: திருச்சி அருகே ஆமூர் கிராமத்தில் இரு கோஷ்டியினரிடையே கோஷ்டி மோதல் மூண்டது. இதில் 15 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். அப்பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவரது கடைக்கு இறைச்சி வாங்க அவர் சென்றார். அப்போது ராஜேந்திரனுக்கும், பழனிச்சாமிக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
அக்கம் பக்கத்தினர் அவர்களை விலக்கி விட்டனர். இந்த நிலையில் பழனிச்சாமியின் தந்தை சன்னாசி, மதிய உணவுக்கு சாப்பிட வருமாறு அழைக்க பழனிச்சாமி இருந்த கடைக்குப் போனார். அப்போது ஒரு கும்பல் சன்னாசியை வழிமறித்து பழனிச்சாமி குறித்து கண்டித்து தகராறு செய்தனர்.
இதையடுத்து சன்னாச்சிக்கு ஆதரவாக சிலர் திரண்டனர். அவர்களும்,எதிர் தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.
கட்டைகள் உள்ளிட்டவற்றை கொண்டு சரமாரியாகத் தாக்கினர். இதில் 2 பெண்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை முசிறி மற்றும் ஸ்ரீரங்கம் மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.
போலீஸார் விரைந்து வந்து 35 பேரைக் கைது செய்தனர். அங்கு தற்போது அமைதி நிலவுகிறது. போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications