சீமான்-அமீருக்கு ஜாமீன்: இன்று விடுதலை

இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து ராமேஸ்வரத்தில் கடந்த 19ம் தேதி திரை உலகத்தினர் சார்பில் பேரணியும் பொதுக்கூட்டமும் நடந்தது.
அதில் பேசிய சீமானும் அமீரும் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருவரும் ஜாமீன் கோரி நேற்று முன்தினம் ராமநாதபுரம் விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனுக்களை முன்னதாகவே விசாரிக்கக் கோரி அவர்கள் சார்பில் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று நீதிபதி மாயாண்டி முன் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சீமான், அமீருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அவர்கது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் மதுரை 1வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து இருவரும் இன்று விடுதலையாகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications