கருணாநிதியை சந்தித்து நிதியளித்த எஸ்.வி.சேகர்

ஜெயலலிதாவுக்கும், எஸ்.வி.சேகருக்கும் டெர்ம்ஸ் சரியில்லை என்பது அதிமுக வட்டாரத்தில் மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரத்திலும் நன்கு தெரிந்த ஒன்று.
சமீபத்தில் நடந்த பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களுக்கு சேகர் அழைக்கப்படவில்லை. அவர் கட்சியை விட்டு நீக்கப்படுவார் எனவும் செய்திகள் கிளம்பின. அவரே ராஜினாமா செய்யப் போகிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இரண்டுமே நடக்கவி்ல்லை.
இந்த நிலையில், ஜெயலலிதா- எஸ்.வி.சேகர் மோதல் போக்கை நிரூபிக்கும் வகையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், அரசு திரட்டிக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு, தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளார் எஸ்.வி.சேகர்.
முதல்வர் கருணாநிதியை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து இதை அவர் அளித்தார்.
இலங்கை பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி சரியாக முடிவு எடுக்க தவறிவிட்டார் என்றும் எனவே அவர், பதவி விலக வேண்டும் என்றும் அதிமுகவினர் லட்சக்கணக்கில் தந்தி அனுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில், எஸ்.வி.சேகர் முதல்வரை சந்தித்து நிதியுதவி அளித்திருப்பது அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாகி அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு உதவுவது மனிதாபிமான கடமை. தமிழக அரசு திரட்டும் நிதிக்கு, தாம் ஒரு மாத ஊதியத்தை வழங்கியதில் தவறும் எதுவும் இல்லை என்றார்.
அரசு வேண்டுகோள்:
இதற்கிடையே இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட விரும்புவோர் தலைமைச் செயலாளரிடமோ அல்லது அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடமோ நேரடியாக வழங்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
நிவாரண உதவிகளை சேகரிக்கும் பொறுப்பு தனிப்பட்ட யாரிடமும் வழங்கப்படவில்லை என்றும் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்கள் போன்ற நிவாரணப் பொருட்களாக இருந்தால் அவற்றை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் நேரிடையாக அளிக்குமாறும்,
நிவாரண உதவிகளை சேகரிக்கும் பொறுப்பு தனிப்பட்ட எந்த ஒரு நபருக்கோ, நிறுவனத்திற்கோ, அமைப்பிற்கோ வழங்கப்படவில்லை என்றும்,
நிவாரணப் பொருட்களை வழங்குவோர் அழுகும் பொருட்கள் மற்றும் துணி வகைகளை தவிர்க்குமாறும்,
அரிசி-பருப்பே அவசியம்:
அரிசி, பருப்பு போன்ற தானியங்களுக்கே அதிக தேவை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications