தீவிரவாத பெண் சாமியாருடன் கூட்டு-லெப்டினென்ட் கர்னல் சி்க்கினார்
போபால்: மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ லெப்டினன்ட் கர்னல் ஒருவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பிடித்துள்ளனர்.
மாலேகான் குண்டுவெடிப்பில் இந்து ஜாகிரண் மஞ்ச் என்ற அமைப்புக்கு தொடர்பு இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. இதையடுத்து அந்தஅமைப்பைச் சேர்ந்த பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் முன்னாள் ராணுவத்தினர் ஆவர்.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் பச்மார்ஹி பகுதியைச் சேர்ந்த ராணுவ லெப்டினென்ட் கர்னல் ஒருவர் மகாராஷ்டிர போலீஸ் வசம் சிக்கியுள்ளார்.
அவருக்கும்,மாலேகான் குண்டுவெடிப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், அந்த அதிகாரியைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
உடனடியாக அவர் மும்பை கொண்டு செல்லப்பட்டார். அங்கு வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
பெண் சாமியாருக்கு சீட்-உமா பாரதி:
இதற்கிடையே பெண் சாமியார் பிரக்யா சிங்கு விரும்பினால், மத்திய பிரதேசத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்படு்ம் என உமா பாரதியின் பாரதிய ஜனசக்தி கட்சி தெரிவித்துள்ளது.
பிரக்யா ஒரு அப்பாவி. சாமியார்களின் புகழைக் கெடுக்கவும், அரசியல் உள்நோக்கம் காரணமாகவும் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் விரும்பினால் மத்திய பிரதேசத்தில் போட்டியிடலாம். அவரை பாஜகவின் சக்தி வாய்ந்த தலைவருக்கு எதிராக நிறுத்துவோம் என அந்தக் கட்சி கூறியுள்ளது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications