குருவுக்காக திருச்சி சிறையில் மருத்துவ முகாம்
திருச்சி: திருச்சி சிறையில் மாநிலத்திலேயே முதல் முறையாக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. பிரமாண்டமான அளவில் நடந்த இந்த மருத்துவ முகாமில் 2000க்கும் மேற்பட்ட கைதிகள் கலந்து கொண்டு பலனடைந்தனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் திருச்சி மத்திய சிறைக்கு வந்து அங்கு அடைக்கப்பட்டுள்ள வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை சந்தித்தார்.
அப்போது சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என காடுவெட்டி குரு கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அங்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த அமைச்சர் அன்புமணி நடவடிக்கை எடுத்தார்.
இந்த முகாமில், புதுச்சேரி ஜிப்மர், பெங்களூர் நிமான்ஸ், சென்னை அப்பல்லோ, திருச்சி ஜிவிஎன் மருத்துவமனை ஆகியவற்றிலிருந்து 95 டாக்டர்கள் வந்திருந்தனர்.
ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதிக்கான சோதனைகள், ஈசிஜி உள்ளிட்ட சோதனைகள் முகாமில் பங்கேற்ற கைதிகளுக்கு நடத்தப்பட்டன.
பல்வேறு பிரிவு சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு தமிழக சிறையில் மருத்துவ முகாம் நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications