தீவிரவாத பெண் துறவிக்கு பால் தாக்கரே ஆதரவு
புனே: மாலேகாண் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 3 பேருக்கும் இந்து சமுதாயம் முழு ஆதரவையும் தெரிவிக்க வேண்டும் என சிவசேனா தலைவர் பால் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சிவசேனாவின் சாம்னா இதழில் அவர் எழுதியுள்ள தலையங்கம்:
துறவி பிரக்யா சிங் தாக்கூர், ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய், சமீர் குல்கர்னி ஆகியோருக்கு ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் ஆதரவளிக்க வேண்டும்.
நாட்டை பலவீனமாக்கும் எந்த வகையான தீவிரவாதத்தையும் நான் ஆதரிக்கவில்லை. மாலேகான் சம்பவத்தில் அப்பாவிகள் உயிரிழந்ததற்கு நான் வருத்தப்படுகிறேன்.
ஆனால் போலி மதச்சார்பற்றவாதிகள், நாடாளுமன்றத்தைத் தாக்கிய அப்சல் குருவை ஆதரிக்கும்போது, நாம் ஏன் பிரக்யா சிங், ரமேஷ் உபாத்யாய், சமீர் குல்கர்னி ஆகியோர் மீது அன்பு செலுத்தக் கூடாது?
தினந்தோறும் முஸ்லீம் தீவிரவாதிகள் இந்துக்களை குண்டு வைத்துக் கொல்கின்றனர். அஸ்ஸாமில் கூட சமீபத்தில் குண்டுவெடித்தது. வங்கதேசத்திலிருந்து ஊடுறுவியவர்கள்தான் இதற்குக் காரணம்.
இதன் விளைவாக பிரக்யாவோ, ரமேஷ் உபாத்யாயோ, சமீர் குல்கர்னியோ செயல்பட்டிருந்தால் அவர்களை நாம் குற்றம் சாட்ட முடியாது.
முஸ்லீம்களை தாஜா செய்யும் அரசியலை நடத்தி வருகிறது காங்கிரஸ் கட்சி. அந்தக் கட்சி சொல்கிறபடிதான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் நடந்து வருகிறது.
நன்கு படித்த, நாகரீகமான முறையில் வாழ்ந்து வருபவர்களை மாலேகான் குண்டுடுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புப்படுத்தி கைது செய்திருப்பது முஸ்லீம் அடிப்படை வாதிகளை திருப்திப்படுத்தவும், இந்துக்களை நசுக்கவும் நடக்கும் முயற்சியே ஆகும் என்று கூறியுள்ளார் தாக்கரே.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications