சந்த்ராயன் அனுப்பிய முதல் படங்கள்!
10 நாட்களுக்கு முன் பிஎஸ்எல்வி மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது சந்த்ராயன். இப்போது நிலவுக்கு பாதி வழியில் உள்ள சந்த்ராயன் பூமியை படம் பிடித்து அனுப்ப ஆரம்பித்துள்ளது.
அதில் உள்ள டெர்ரைன் மேப்பிங் கேமரா (Terrain Mapping Camera) முதல் படமாக ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரைப் பகுதியை படம் பிடித்து அனுப்பியது. இந்தப் படம் 19ம் தேதி காலை 8 மணிக்கு எடுக்கப்பட்டது. அப்போது சந்த்ராயன் பூமியிலிருந்து 9,000 கி.மீ உயரத்தில் பறந்தது.
இதையடுத்து 12.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடலோரப் பகுதியை சந்த்ராயன் படம் பிடித்து அனுப்பியது. அப்போது அது பூமியிலிருந்து 70,000 கி.மீ. உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
இந்தப் படங்களை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் காட்ட அவர் பெரும் ஆர்வத்துடன் அதைப் பார்த்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
நிலவை நெருங்கிய பின் சந்த்ராயன் அதைப் படம் பிடிக்க ஆரம்பிக்கும்.
இப்போது நீள்வட்டப் பாதையில் பூமியை சுற்றிக் கொண்டுள்ளது சந்த்ராயன். இப்போது அதற்கும் பூமிக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 465 கிமீயாகவும் அதிகபட்ச தூரம் 2,67,000 கிமீயாகவும் உள்ளது.
இந்த உயரம் அடுத்த 5 நாட்களில் மேலும் அதிகரிக்கப்பட்டு நிலவின் சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்லப்படும். பூமியிலிருந்து நிலா 3,84,000 கி.மீ தொலைவில் உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!













Click it and Unblock the Notifications