குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு பூமி பூஜை
குளச்சல்: குளச்சல் மீன் பிடி துறைமுகத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இயற்கை துறைமுக நகரமான குளச்சலில் வர்த்தக துறைமுகம், மற்றும் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசு குளச்சலில் மீன்பிடி துறைமுகம் அமைக்க 27 கோடி ரூபாய் நிதி ஓதுக்கிடு செய்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி மீன்பிடி துறைமுகத்திற்கு உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன் தொடர்ச்சியாக நேற்று குளச்சலில் மீன்பிடி துறைமுகம் அமையவுள்ள இடத்தில் பூமி பூஜை நடந்தது. பூமி பூஜையை தந்தரி சாஸ்தா சுவாமி நடத்தினார்.
பூமிபூஜை நடைபெற்றுள்ளதால் மீன்பிடிதுறைமுக பணிகள் இன்னும் சில தினங்களில் துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரெஞ்சு தொழில்நுட்பத்தின்படி இந்த மீன்பிடி துறைமுகம் நவீன முறையில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
