தந்தை ஓட்டிய பஸ்சில் சிக்கி பலியான குழந்தை
திருவள்ளூர்: தந்தை ஓட்டிய ஸ்கூல் பஸ்சிலேயே அவரது குழந்தை சிக்கி பலியானது. ஊத்துக்கோட்டை அருகே இந்த துயர சம்பவம் நடந்தது.
நம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஞானவேல் (35) தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக உள்ளார்.
தினமும் நம்பாக்கத்தைச் சேர்ந்த குழந்தைகளை பஸ்சில் ஏற்ற வரும்போது வீட்டின் முன் பஸ்சை நிறுத்தி சாப்பாடு கேரியரை வாங்கிச் செல்வார்.
நேற்று முன் தினம் காலை தனது வீட்டின் முன் பஸ்சை நிறுத்தினார். அவருடைய மனைவி மகேஸ்வரி சாப்பாடு கேரியரை எடுத்து வந்தார்.
மகேஸ்வரியின் பின்னால் அவர்கது ஒன்றரை வயது குழந்தை சஞ்சய்யும் தத்தி வந்தான். ஆனால், அதை கணவரும் மனைவியும் கவனிக்கவில்லை.
சாப்பாடு கேரியரை வாங்கியவுடன் ஞானவேல் பஸ்சை இயக்கினார். அப்போது குழந்தையின் ஓலக் குரல் கேட்டு தாயார் திரும்பிப் பார்த்தபோது பஸ்சின் சக்கரம் குழந்தையின் காலில் ஏறி தொடைப் பகுதியே நசுங்கிப் போனது.
தாயும் தந்தையும் துடித்து அழுதபடி திருவள்ளூர் அரசு மரு்துவமனைக்கு குழந்தையை எடுத்துக் கொண்டு ஓடினர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த பிஞ்சுக் குழந்தை பலியானது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications