ஈழத் தமிழர்களுக்கு நிதி திரட்ட 'ஷூ பாலிஷ்'
நெல்லை: நெல்லையைச் சேர்ந்த பாப்புராஜ் என்கிற போட்டோகிராபர், இலங்கைத் தமிழர்களுக்கு நிதி திரட்ட ஷூ பாலிஷ் போட்டு நிதி சேகரிக்கிறார்.
நெல்லை சாந்திநகரை சேர்ந்தவர் பாப்புராஜ். பட்டதாரி. போட்டோகிரபராக உள்ளார். ஆண்டுதோறும் ஏழை, ஊனமுற்ற குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
இலங்கை தமிழர்களுக்கு நிவாரண உதவி அளிக்க வித்தியாசமான முறையில் யாரிடம் பணம் வசூலிக்காமல் நிதி திரட்ட பாப்புராஜ் முடிவு செய்தார்.
நெல்லை புதிய பஸ் ஸ்டாண்டில் மக்களுக்கு ஷூ பாலிஷ் போடும் பணியை அவர் துவக்கினார். இப்பணியை வரும் 5ம் தேதி வரை மேற்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார்.
தினமும் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை ஷூ பாலிஷ் போடும் பணியை அவர் மேற்கொண்டுள்ளார்.
முதல்நாளான அவருக்கு ஷூ பாலிஷ் போட்டதில் ரூ.300 கிடைத்தது. 5ம் தேதிக்குள் எப்படியும் அதிக அளவு பணம் வசூலாகிவிடும் என்ற நம்பிக்கை பாப்புராஜூக்கு உள்ளது.
இதுகுறித்து பாப்புராஜ் கூறும்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்டும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டு ஷூ பாலிஷ் போட்டு வருகிறேன்.
என் வழக்கமான பணி பாதிக்காத படி காலையில் மட்டும் ஷூ பாலிஷ் போடுகிறேன். ஷூ பாலிஷ்க்கு அவரவர் இஷ்டப்படி அளிக்கும் பணத்தை பெற்றுக் கொள்வேன். சிலர் 1 ரூபாய் தந்தனர். கண்பார்வையற்ற ஒருவர் 10 ரூபாய் தந்து ஊக்கப்படுத்தினார்.
5ம் தேதி வரை ஷூ பாலிஷ் போட்டு கிடைக்கும் பணத்தை கலெக்டர் அலுவலகத்தில் அளிக்க முடிவு செய்துள்ளேன். இலங்கை தமிழர்களுக்கு உதவுவதில் நான் பலருக்கு முன் மாதிரியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
குஜராத் பூகம்பத்திற்கும் இதே போல ஷீ பாலிஷ் போடும் பணியை மேற்கொண்டு 6 ஆயிரத்து 500 ரூபாய் சேகரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாப்புராஜ் அனுப்பினார். சுனாமி நிவாரண நிதிக்கும் ஷூ பாலிஷ் மூலம் 8 ஆயிரம் ரூபாய் சேகரித்து அளித்தார்.
குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெல்லை ஜங்ஷன் முதல் டவுன் வரை உள்ள கடைகளில் டெலிபோன் சுத்தம் செய்து 2 ஆயிரம் ரூபாய் சேகரித்து அனுப்பியுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதியுதவி அளிக்க ஷூ பாலிஷ் போடும் பணியை மேற்கொண்டுள்ள பாப்புராஜ் நெல்லையில் பலர் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications