சொத்துப் பிரச்சினை: தம்பியைக் கொடூரமாகக் கொன்ற அண்ணன்
குல்பர்கா: சொத்துக்கு போட்டியாக வந்து விடுவான் என்ற பயத்தில் கர்நாடக மாநிலம் குல்பர்காவில், 16 வயது தம்பியைக் கொடூரமாகக் கொன்ற கல்லூரி மாணவனை போலீஸார் தேடி வருகின்றனர்.
குல்பர்கா, சர்வேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் பத்தாவது வகுப்பு படித்து வந்தார். இவரது அண்ணன் சந்தோஷ். பொறியியல் படிப்பு படித்து வருகிறார்.
நேற்று இரவு வீட்டின் மேல் அறையில் இருவரும் தூங்கினர். அப்போது நள்ளிரவுக்கு மேல் தம்பியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார் சந்தோஷ்.
பின்னர் அருண்குமாரின் உடலை சாக்குப் பையில் போட்டு மூடி விட்டு வீட்டை விட்டு தலைமறைவாகி விட்டார்.
இன்று காலை அருண்குமாரின் தாயார் சாக்குப் பையைப் பார்த்து குழம்பி, திறந்தபோது அருண்குமாரின் உடலைப் பார்த்து அதிர்ந்தார்.
அருண்குமார் குடும்பத்துக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவற்றை தம்பியுடன் பங்கிட வேண்டுமே என்ற கோபத்தில், அருண்குமாரை, சந்தோஷ் கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications