28 இலங்கை மீனவர்கள் விடுதலை - தூதரகத்தில் இன்று ஒப்படைப்பு
தூத்துக்குடி: ராமநாதபுரம் கோர்ட்டால் விடுவிக்கப்பட்ட 28 இலங்கை மீனவர்கள் இன்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி தெர்மல் நகர் போலீசில் ஓப்படைக்கப்பட்டனர். அவர்கள் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த மாதம் 28 மீனவர்களையும் விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன்பின்பு அவர்கள் தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு தயார் நிலையில் இருந்தனர்.
ஆனால் இலங்கை தூதரகமும், இலங்கை கடற்படையும் அவர்களை அழைத்து செல்வதில் கால தாமதம் செய்து வந்தன. கடந்த 5 மாதமாக மீனவர்கள் தூத்துக்குடி காவல் நிலையத்திலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் 28 மீனவர்களையும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்க முடிவு செய்தது.
இதற்காக நேற்று மாலை 28 மீனவர்களையும் இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டனர்.
இன்று காலை இன்ஸ்பெக்டர் மகிமை வீரன் 28 மீனவர்களையும் இலங்கை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கிறார்
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications