நிவாரண நிதியை சிங்கள அரசிடம் ஒப்படைக்கக் கூடாது! சரத்குமார்
சென்னை: தமிழ் மக்கள் மற்றும் நடிகர்களிடம் திரட்டப்பட்ட நிவாரண நிதியை எக்காரணம் கொண்டும் சிங்கள அரசிடம் கொடுக்கக் கூடாது, என்று நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக 46 லட்ச ரூபாய் வசூலானது.
நடிகர்களில் ரஜினி அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வழங்கினார். கமல், சிவக்குமார் ஆகியோர் தலா 5 லட்சம் வழங்கினார்கள். சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகா 2.5 லட்சம் ரூபாய் நிதி வழங்கினர். நடிகர்கள் வழங்கிய நிதியுடன், நடிகர் சங்கத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. மொத்தம் 46 லட்சம் ரூபாய் வசூலானது.
இந்த நிதி முழுமையாக நடிகர் சங்கம் சார்பில் முதல்வரிடம் இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக ஒப்படைக்கப்படும்.
"இந்த நிதி மக்கள் பணம்தான். ஆனால் கஷ்டப்பட்டதற்காக நடிகர்களுக்கு மக்கள் கொடுத்த பணம். இந்த நிதியை முறையாக, தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே செலவழிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சிங்களர்களிடம் கொடுக்கக் கூடாது.
கொடுத்தால், அது தமிழனை அழிக்க ஆயுதம் வாங்க மட்டுமே பயன்படும். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன், பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு இந்த நிதியைச் செலவிட வேண்டும்", என்று முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications