நிதி- நிவாரண உதவி புலிகள் கைக்குப் போகக் கூடும்: ஜெ.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைத் தமிழர் நிவாரண நிதி என்ற பெயரில் முதல்வர் கருணாநிதி வசூலிக்கும் நிதியும்,நிவாரணப் பொருட்களும்,பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் போய்ச் சேராமல் விடுதலைப் புலிகளுக்குப் போய் விடுமோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் படுகொலை செய்யப்பட்டபோது, அதற்கு இரங்கல் தெரிவித்து கவிதை எழுதியவர் முதல்வர் கருணாநிதி. எனவே இதுபோல வசூலிக்கப்படும் நிதியும்,நிவாரணப் பொருட்களும் புலிகள் கைக்குப் போய்ச் சேராதா என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுவது இயற்கைதான்.
தமிழகத்திலிருந்து ஏற்கனவே பெருமளவிலான பெட்ரோல் கடத்தப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு போய்க் கொண்டிருக்கிறது. அதேபோல முதல்வர் கருணாநிதி மூலம் வசூலிக்கப்படும் நிதியும், நிவாரணப் பொருட்களும் புலிகளை சென்றடையுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மக்களிடமிருந்து வற்புறுத்தி நிதி வசூலிக்கிறார்கள். அதேபோல, அரசு ஊழியர்களின் அனுமதியைப் பெறாமலேயே அவர்களது ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ரூ. 5 லட்சம் நிதியளித்துள்ளார். அவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது?, அவர் வருமான வரி கட்டுகிறாரா?. இதற்கெல்லாம்,மக்களுக்கு கருணாநிதி விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications