திட்டமிட்டபடி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஸ்டாலின் உறுதி

கிருஷ்ணகிரி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் விழா, புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் உள்ளாட்சி தினவிழா ஆகிய ஐம்பெரும் விழா நேற்று காலை கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு ரூ.59 கோடியே 59 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ.22 கோடியே 27 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார். 3 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18 கோடி சுழல்நிதி வழங்கிய பின் அவர் பேசியதாவது:
கடந்த 1996-ம் ஆண்டு முதல் நவம்பர் 1-ந் தேதியை உள்ளாட்சி தினமாக கொண்டாடி வருகிறோம். உள்ளாட்சி அமைப்புகள் மக்களின் அடிப்படை வசதிகளை அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கும் பெரும் பணியாற்றி வருகின்றன.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் தாகத்தை தீர்க்க சுத்தமான புளோரைடு கலப்பு இல்லாத காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என்ற பல்லாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்&அமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தற்போது இந்த திட்டப்பணிகள் ஒரு நல்ல நிலையை இப்போது எட்டியுள்ளன.
ஆனால், இந்த திட்டத்தை வைத்து நமது அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் அரசியல் நடத்தும் சூழ்நிலை எழுந்துள்ளது. இந்த நேரத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு நான் ஒன்றை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் திட்டமிட்டபடி குறிப்பிட்ட கால அட்டவணைப்படி நிறைவேற்றப்பட்டு, இந்த மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.
பின்னர் தர்மபுரியில் நடைபெற்ற அரசு விழாவிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி வழங்கினார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications