ஜெ மீது மானநஷ்ட வழக்கு-கரூர் நகராட்சி முடிவு
கரூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது மான நஷ்ட வழக்குத் தொடர் என கரூர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கரூர் நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
கடந்த 29 ஆம் தேதி ஜெயலலிதா வெளிட்டுள்ள அறிக்கையில், கரூர் நகரில் 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ரூ. 4.5 கோடி குடிநீர்த் திட்டத்தை திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கிடப்பில் போட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கரூருக்கு கடந்த 1989ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் தான் காவிரிக் குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்பு, அந்த திட்டம் 1996ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ரூ. 3.60 லட்சம் செலவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
உண்மை இப்படி இருக்கையில், குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பொய்யான தகவல்களை ஜெயலலிதா அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
இந்தச் செயல் கரூர் நகர் மன்றத்துக்கு அவப் பெயரை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ரூ. 2 கோடி நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குத் தொடர கரூர் நகராட்சி ஒருமனதாக தீர்மானித்துள்ளது.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை கரூர் நகராட்சி வாபஸ் பெற வேண்டும், இல்லையெனில் கரூர் நகராட்சி முன்பு தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம் என கரூர் மாவட்ட அதிமுக இளைஞர் அணிச் செயலாளர் நாகராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications