பொருளாதார சிக்கல்-பிரதமருக்கு உதவ வரும் ரகுராம் ராஜன்

நேற்று இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்திய சிங், அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கவும் உதவிகள் செய்யவும் ஒரு உயர் மட்டக் குழுவையும் அமைத்துள்ளார். இதன் தலைவராகவும் ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மத்திய அரசின் செயலாளருக்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
சிகாகோ பல்கலைக்கழகத்தில் நிதித்துறை பேராசியராக உள்ள ரகுராம் முன்பு சர்வதேச பொருளாதார நிதியத்தின் (International Monetary Fund- IMF), தலைமை பொருளாதார நிபுணராக இருந்தவர்.
சமீபத்தில் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைகள் அளித்த கமிட்டியின் தலைவராகவும் ராஜன் இருந்தார். சிஆர்ஆர், ரெபோ ரேட்களை குறைக்குமாறு இந்தக் குழு செய்த பரிந்துரைகளை ரிசர்வ் வங்கி அமலாக்கியதையடுத்து பணவீக்கம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மன்மோகன் சிங்குக்கு மிக நெருக்கமான ராஜன் ஏற்கனவே பல பொருளாதார ஆலோசனைக் குழுக்களிலும் இடம் பெற்று யோசனைகள் வழங்கியுள்ளார்.
சிகாகோ பல்கலைக்கழகம் தவிர அமெரிக்காவின் நார்த்வெஸ்ட்டர்ன் பல்கலைக்கழகம், எம்ஐடி (Massachusetts Institute of Technology- MIT) ஆகிய கல்வி நிலையங்களிலும் விசிட்டிங் புரபஸராக உள்ளார் ராஜன்.
அகமதாபாத்தில் ஐஐஎம்மில் பயின்ற இவர் பின்னர் அமெரிக்காவில் எம்ஐடியில் பிஎச்டி பட்டம் பெற்றார்.
பண வீக்கம் உள்ளிட்ட பல பொருளாதார விவகாரங்களில் பிரதமர், நிதியமைச்சகம் ஆகியோருக்கும் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகக் கூறப்படும் நிலையில், பிரதமருக்கு உதவ ராஜன் நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications