75% எம்பி-எல்எக்கள் ராஜினாமா: லாலு
டெல்லி: மகாராஷ்டிரத்தில் பிகாரிகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலைக் கண்டித்து தனது கட்சியைச் சேர்ந்த 75 சதவீத ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பி, எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்களை அதன் தலைவரும் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவிடம் தந்துவிட்டதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
இதில் மத்திய அமைச்சர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலத்தவர் மீது கொலை வெறித் தாக்குதலை நடத்தி வரும் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை குண்டர் சட்டத்தில் கைது செய்யாவிட்டால் வரும் 15ம் தேதிக்குள் தனது கட்சியின் மத்திய அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வர் என லாலு எச்சரித்துள்ளார்.
இந் நிலையில் லாலுவிடம் 75 சதவீத எம்.பி, எம்எல்ஏ, அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களைத் தந்துவிட்டதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷியாம் ரஜக் தெரிவித்துள்ளார்.
அதே போல பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது ஐக்கிய ஜனதா தள எம்பி, எம்எல்ஏக்கள், மாநில அமைச்சர்களை பதவி விலகச் சொல்வார் என்று நம்புகிறேன். நிதிஷ் அரசில் பங்கேற்றுள்ள பாஜகவும் தனது பிகார் மாநில எம்பி, எம்எல்ஏக்களையும் ராஜினாமா செய்ய வைக்கும் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார் ரஜக்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications