திமுக கூட்டணியில் தொடர்வோம்-காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 10ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் 8ம் தேதி திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரத்தில் திமுகவுக்கும் காங்கிரஸ், பாமக, இடதுசாரிகள் இடையே கருத்து வேறுபாடுகளும் மோதலும் வலுத்து வருகிறது.

திமுகவுக்கு நெருக்கடி தரும் முடிவுக்கு பாமகவும் இடதுசாரிகளும் வந்துவிட்டனர். அதே வேலையை நாமும் செய்ய வேண்டும் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூறி வருகின்றனர்.

வழக்கமாக தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும்போது அதே தினத்தில் காலையில் சம்பிரதாயத்துக்காகத் தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கும்.

காங். மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு:

ஆனால், இந்த முறை நாளையே காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர், வாசன் மற்றும் இளங்கோவன், காங்கிரஸ் எம்பிக்கள் பங்கேற்கவுள்ளனர். கட்சியின் மத்திய பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர்.

மேலும் ஆட்சியில் பங்கு கோஷத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் வரம்பு மீறிப் போய்விட வேண்டாம் என காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு உத்தரவிடப்படும் என்று தெரிகிறது.

திமுக கூட்டணியில் தொடர்வோம்:

இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அருண்குமார்,

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கும். கூட்டணியில் எந்த வித மாறுதலும் இல்லை என்றார்.

இதன்மூலம் அவர் திமுக குறித்த டெல்லியின் நிலையை விளக்கிவிட்டு நாளைய கூட்டத்துக்கு வருவதாகத் தெரிகிறது.

இந் நிலையில் திமுக தனது எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. சட்டமன்றத்தில் பாமக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரசிடமிருந்து வரும் நெருக்கடிகளை சமாளிப்பது குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் வரும் 8ம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+