தற்கொலை செய்து கொண்ட போலீஸ் ஏட்டு!
திண்டுக்கல்: மதுரையை சேர்ந்த போலீஸ் ஏட்டு ஒருவர் திண்டுக்கல்லில் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை கே.புதூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் முத்துப்பாண்டி (42). இவர் கடந்த 29ம் தேதி மதுரை சூர்யா நகர் செக் போஸ்ட்ல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது முத்துப்பாண்டி துப்பாக்கியை எடுத்து கழுத்தில் வைத்து திடீரென சுட்டுக் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இத் தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து இவர் தனது மனைவி சித்ரா, மகன் அருண், 8 மாத கைக் குழந்தை ஆகியோருடன் திண்டுக்கல் அருகில் குள்ளனம்பட்டி பர்மா காலனியில் உள்ள சகோதரியின் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் இவர் தங்கிருந்த வீட்டு மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த போலீசார் முத்துப்பாண்டி பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications