குன்னூரில் உறை பனி!
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூரில் உறை நிலவுகிறது.
கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் மழை பெய்தது. மழை ஓய்த பின்பு அங்கு கடும் குளிர் வாட்டி எடுக்கிறது.
இந் நிலையில் குன்னூர், குந்தா மற்றும் கிளன்மார்கன் பகுதிகளில் வெப்பநிலை மிகவும் குறைந்தது. இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் இந்த குளிர் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னையிலும்...
அதே போல பகல் நேரத்தில் வெயில் கொளுத்தும் சென்னையில் இரவில் பனி அதிகமாக உள்ளது.
இந் நிலையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 63 மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதற்கு பகல்-இரவு வெப்ப நிலையில் நிலவும் கடும் மாற்றமே காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications