பதவி விலகும் விடுதலைச் சிறுத்தை எம்எல்ஏ!
கடலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் செல்வப்பெருந்தகை.
அவருக்கும் வி.சி. தலைவர் திருமாவளவனுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் நடந்து வருகிறது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை,
எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். ராஜினாமா கடிதத்தை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சபாநாயகரிடம் அளிப்பேன்.
என்னை நம்பி வாக்களித்த மங்களூர் தொகுதி மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது ராஜினாமாவுக்கு என்ன காரணம் என்பது குறித்த தன்னிலை விளக்க கூட்டத்தை நாளை (வியாழக்கிழமை) திட்டக்குடியில் நடத்த உள்ளேன்.
இதில் பங்கேற்கும்படி ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், வார்டு குழு தலைவர்கள், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பியுள்ளேன். மீதியை நாளை சொல்கிறேன் என்றார் செல்வப் பெருந்தகை.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications