'ஓவர் லோடிங்': அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: கூடுதல் சுமை ஏற்றிச் சென்றதாக பிடிபட்ட லாரிகள், பஸ்கள், டிரக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் குறித்த விவரத்தை 2 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் போக்குவரத்து ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து பொது நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவில், சென்னை துறைமுகத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பொருட்களை ஏற்றிச் செல்லும் கன ரக வாகனங்கள் மோட்டார் வாகன சட்டத்தை மீறும் வகையில், அதிக சுமையை ஏற்றிச் செல்கின்றன.
இப்படி அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றிச் செல்வதால், டயர்கள் வெடிப்பது, பிரேக் டவுன் ஆவது, விபத்துக்கள் ஏற்படுவது, போக்குவரத்து நெரிசல் என ஏற்பட வழி வகுக்கிறது.
அதேபோல, அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் கூட அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவிலான பயணிகளையும், சுமைகளையும் ஏற்றிச் செல்கின்றன.
இப்படி கூடுதல் சுமையுடன் செல்லும் வாகனங்கள் குடியிருப்புகள், வணிக பகுதிகள் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
எனவே இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும் என போக்குவரத்து ஆணையர், தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், 2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு போக்குவரத்து ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications