இந்தியாவில் போலியோ ஒழிப்பில் பி்ல்கேட்ஸ்

அடுத்த இரு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் பிரமிப்பூட்டும் வகையில் போலியோ நோய் பாதிப்பு குறைந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் போலியோவின் பாதிப்பு அதிகம் உள்ளதாகவும் அந்த நோயைக் குறைக்க தனது பில் அண்ட் மெலின்டா அறக்கட்டளை சார்பில் கணிசமான உதவிகள் அளிக்கப்படும் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸ் அறிவித்திருந்தார்.
சென்னது போலவே புதன்கிழமை இந்தியா வந்த அவர், தனது அறக்கட்டளையின் இந்தியப் பிரிவைத் துவக்கி வைதார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இப்போது இந்தியாவில் போலியோ ஒழிப்புக்காக சொட்டு மருந்து முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதைவிட ஊசிமூலம் போலியோ தடுப்பு மருந்து கொடுப்பதே அறிவுப்பூர்வமானது, அதிக பலன் தரக்கூடியது. அடுத்த இரு ஆண்டுகளில் இந்தியாவில் போலியோ நோயே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்பதே என் நோக்கம், என்றார் பில் கேட்ஸ்.
சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகளில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில ஆப்ரிக்க நாடுகள் மற்றும் பாகிஸ்தான், இந்தியாவில்தான் இன்னமும் அந்நோய் பாதிப்பு தொடர்கிறது. குறிப்பாக உத்திரப்பிரதேசம், பீகார், தமிழகத்தில் போலியோ நோயாளிகள் அதிகம். கடந்த ஆண்டு புதிதாக 500 பேருக்கு போலியோ நோய் பாதித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக பல நாடுகள் தங்கள் சுகாதார செலவைக் குறைத்துக் கொண்டு வருவதாகவும், இது மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறினார் பில்கேட்ஸ்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications