ராஜ் தாக்கரேவுக்கு கண்டனம் 5 ஐக்கிய ஜனதாதள எம்.பிக்கள் ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

George Fernandes
டெல்லி: மகாராஷ்டிராவில் குறிப்பாக மும்பையில், வட இந்தியர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வரும் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 5 லோக்சபா எம்.பிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் தொடர்ந்து வட இந்தியர்களுக்கு எதிரான தாக்குதலில் இறங்கினர்.

இதற்கு இந்தி பேசும் மாநிலமான பீகார், உத்தரப் பிரதேசத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பீகாரில் பந்த் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தன.

இந்த நிலையில் ராஜ் தாக்கரேவைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதாதள எம்.பிக்களான ஜார்ஜ் பெர்னாண்டஸ், பிரபுநாத் சிங், கைலாஷ் பைத்தா, மீனா சிங், ராஜீவ் ரஞ்சன் சிங் லல்லன் ஆகிய ஐந்து எம்.பிக்களும் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

ஐந்து பேரும் தங்களது ராஜினாமா கடிதங்களை மக்களவை செயலர் ஆச்சார்யாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+