சென்னை: கொரிய சாப்ட்வேர் அதிகாரி தற்கொலை
சென்னை: சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்த தென் கொரியாவைச் சேர்ந்த அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
தென் கொரியாவின் உல்சான் நகரைச் சேர்ந்தவர் ரியூ பியாங் சாங். 40 வயதாகும் இவர் சென்னையில் உள்ள ஆட்டோ எவர் சிஸ்டம்ஸ் என்ற சாப்ட்வேர் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார்.
இந்த நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்திற்குத் தேவையான சாப்ட்வேர்களை வடிவமைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஆட்டோ எவர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகமும், உற்பத்திப் பிரிவும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளன.
நேற்று இரவு சாங், தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பிரார்த்தனைக்காக வெளியில் போயிருந்த அவரது மனைவி வீடு திரும்பியபோது கணவர் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
வேலையில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சாங் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அவரது உடலை மீட்ட போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் சாங்கின் குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல் தென் கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications