எஸ்.ஐ. மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
சங்கரன்கோவில்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இ.கோட்டைபட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக சாலை மறியல் செய்தவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி இளைஞர் பலியானதால் எழுமலை பகுதியில் கடந்த சில தினங்களாக பள்ளிகள், கடைகள் அடைக்கப்பட்டன.
பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மோதல் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட 73 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் போலீசார் எழுமலையில் தொடர் முகாமிட்டுள்ளனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில், மோதலில் தொடர்புடையவர்களை பிடிக்க சங்கரன்கோயில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி
தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டாயில் ஈடுபட்டனர்.
அப்போது, சங்கரன்கோயில் வையாபுரி நகரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற இருவரை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் போலீசார் முயற்சி செய்தனர்.
அவர்கள் தப்பியோடவே துரைசாமி துரத்திச் சென்றார்.
இதையடுத்து அவர்கள் பெட்ரோல் குண்டுகளை போலீசார் மீது வீசிவிட்டுத் தப்பினர். ஆனாலும் அவர்களை போலீசார் விடாமல் துரத்திப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் பெயர் சங்கரன்கோயிலை அடுத்த செந்தட்டியாபுரம் ராஜா சிங், புதுக்குட்டி என்று தெரிய வந்தது.
இவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இயல்பு நிலைக்கு திரும்பிய எழுமலை:
இதற்கிடையே எழுமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயங்கி வருகின்றன.
பதற்றமாக காணப்பட்ட இந்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications