நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது சந்திராயன்-1

முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆள் இல்லாத சந்திராயன் -1 விண்கலம் கடந்த அக்டோபர் 22ம் தேதி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இதன் மூலம் உலக விண்வெளி வரலாற்றில் இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடம் கிடைத்தது. இந்த நிலையில், தற்போது புவி ஈர்ப்பு விசைப் பகுதியைக் கடந்து நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன்-1 வெற்றிகரமாக நுழைந்துள்ளது.
பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் கட்டமைப்பின், சந்திராயன்-1 விண்கல கட்டு்பாட்டு மையத்தில், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
நேற்று மாலை 4.51 மணியளவில், சந்திராயன் விண்கலத்தில் உள்ள திரவ எரிபொருள் என்ஜினை, 817 விநாடிகளுக்கு விஞ்ஞானிகள் இயக்கி, சந்திராயன் விண்கலத்தை நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தினர்.
மிக மிக கவனத்துடன் செய்யப்பட வேண்டிய பணி இது. கொஞ்சம் அழுத்தம் அதிகமானாலும் கூட விண்கலம் சேதமடைந்து விடும் என்பதால் மிக மிக கவனமாக இப்பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
திட்டமிட்டபடி இப்பணி முடிந்ததால் விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதன் மூலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ள நாடுகள் வரிசையில், இந்தியாவும் இணைந்துள்ளது.இதற்கு முன்பு அமெரிக்கா, சோவியத் யூனியன், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளும், ஐரோப்பிய விண்வெளிக் கழகமும் நிலவுக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளன.
தற்போது சந்திராயன் விண்கலம் நிலவிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நீள்வட்டப் பாதையில் நிலவை சுற்றி வருகிறது சந்திராயன்-1. நவம்பர் 11ம் தேதி, சந்திராயன் -1 விண்கலத்தில் உள்ள மூன் இம்பாக்ட் பிராப், நிலவில் தரையிறங்கும்.
இந்த வரலாற்றுச் சாதனை குறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறுகையில், இது மிக மிக முக்கியமான தருணம். உலக விண்வெளி வரலாற்றில் இந்தியா பெரும் சாதனை படைத்துள்ளது.
இந்தப் பணியை செய்து கொண்டிருந்த சுமார் 20 நிமிடங்களும் எங்களது இதயங்கள் நின்று போயிருந்தன. எங்களது எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் இருந்தது. இப்பணியை முடித்தவுடன்தான் அனைவருக்கும் உயிரே வந்தது.
முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட விண்கலம் சந்திராயன்-1. உலகில் எந்த நாடும் தனது முதல் முயற்சியிலேயே நிலவின் சுற்றுப்பாதையில் தனது விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியதாக தெரியவில்லை. அந்த வகையில் இது இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சாதனை.
சந்திராயன்-1 விண்கலம் வெற்றிகரமாக நிலவை சுற்றி வருகிறது. அதில் உள்ள அனைத்துப் பகுதிகளும் நல்ல முறையில் உள்ளன. வரும் நாட்களில் நிலவுக்கும், சந்திராயன்-1க்கும் உள்ள இடைவெளி படிப்படியாக குறைக்கப்படும் என்றார்.
மன்மோகன் சிங் வாழ்த்து
சந்திராயன்-1 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்திருப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மஸ்கட் சென்றுள்ள அவர் அங்கிருந்தபடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
கண்களுக்கு விருந்து.. நெருக்கமாக வரும் வியாழன் மற்றும் வெள்ளி! மிஸ் பண்ணாதீங்க -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications