ராதிகாவுக்குப் பதவி தர சமத்துவ மக்கள் கட்சி கோரிக்கை
சென்னை: நடிகை ராதிகா சரத்குமாரை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் முழுமையான அளவில் ஈடுபடுத்த வேண்டும். அவருக்கு முக்கியப் பதவி வழங்க வேண்டும் என்று கட்சிக்குள் கோரிக்கை எழுந்துள்ளது.
விஜயகாந்த்தைத் தொடர்ந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார் சரத்குமார். அவரது கட்சி வளர்ச்சியில் ராதிகாவும் முக்கியப் பங்காற்றி வருகிறார். சரத்குமாருக்குப் பக்க பலமாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் ராதிகாவுக்கும் முக்கியப் பொறுப்பு கொடுத்து அவரை கட்சிப் பணியில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் என்று மத்திய சென்னை கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை சரத்குமாரிடம் வழங்கியுள்ளனர்.
இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் எஸ். சுதாகர் கூறுகையில், ராதிகா சரத்குமார் தமிழக மக்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அறிமுகமானவர். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாருக்கு பக்க பலமாக இருந்து வருகிறார். அத்துடன் கட்சியின் மாநாடு மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அவர் தீவிர அரசியலுக்கு வர வேண்டும். மக்களிடையே அவருக்கு இருக்கும் பிரபல்யமும், அவருடைய செயல்திறனும் கட்சியின் வளர்ச்சிக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். நடிப்பு, நிர்வாகத்திறன் மற்றும் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து சூழ்நிலைகளையும் நன்றாக தெரிந்து வைத்திருப்பவர்.
அவருடைய வருகை கட்சிக்கு மட்டுமின்றி தமிழக அரசியலுக்கும் நல்ல பலனை தரும்.
புதிதாக அரசியலுக்கு வரக்கூடியவர் அல்ல அவர். அவரது குடும்பம் அரசியல் குடும்பம். அவரது தந்தை எம்.ஆர்.ராதா தற்போதைய முதல்வருடனும் மிகவும் நெருக்கமாக இருந்தவர். பகுத்தறிவு வளர்ச்சிக்காக பாடுபட்டவர். அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பளித்து அவரை கட்சியில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் என்றார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications