தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு - விசாரணைக்கு உத்தரவு
சென்னை: நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தங்களது கடற்படைக்கு இதில் தொடர்பில்லை என்று இலங்கை துணைத் தூதரகம் மறுத்துள்ளது.
நவம்பர் 7ம் தேதி கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒரு மீனவர் காயமடைந்தார். இலங்கை கடற்படைதான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மீன்வளத்துறை இணை இயக்குநர் தில்லை கோவிந்தன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ விவரம், ஏற்பட்ட பாதிப்பு, துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான காரணங்கள், சம்பவம் நடந்தபோது தமிழக படகுகள் இந்திய எல்லைக்குள் இருந்தனவா, இதைத் தடுக்க என்ன வழிகள் என்பது குறித்து இந்த விசாரணை அதிகாரி விசாரித்து அரசுக்கு அறிக்கை கொடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதாரன்யம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெறும் என்றும், 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை மீன்வளத்துறை செயலாளரிடம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மறுப்பு
இதற்கிடையே, இந்த சம்பவத்தில் இலங்கை கடற்படைக்கு எந்தத் தொடர்பும் இல்லை என இலங்கை துணைத் தூதரகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 26ம் தேதி ஏற்பட்ட இந்திய - இலங்கை கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை இலங்கை அரசு உறுதியுடன் கடைப்பிடித்து வருகிது. இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதில்லை என்று கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதை உறுதியுடன் கடைப்பிடித்து வருகிறது.
நவம்பர் 7ம் தேதி சம்பவத்தில் கடற்படைக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அன்றைய தினம் காங்கேசன்துறையை விட்டு கடற்படை படகுகளோ, கப்பல்களோ எங்கும் செல்லவில்லை.
அன்றைய தினத்தில் கோடியக்கரை - காங்கேசன்துரை மார்க்கத்தில் எந்தத் துப்பாக்கிச் சூடும் நடைபெறவில்லை.
இந்த சம்பவம் விடுதலைப் புலிகளின் கைவரிசையாகத்தான் இருக்கும். இந்திய, இலங்கை நல்லுறவைக் கெடுக்க விடுதலைப் புலிகள்தான் இவ்வாறு செய்திருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications