ராஜபக்சே இன்று இந்தியா வருகை-பிரமதருடன் முக்கிய பேச்சு

வங்கக் கடல் நாடுகளின் கூட்டமைப்பான பிம்ஸ்டெக்கின் 3 நாள் மாநாடு டெல்லியில் 11ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
அறிவியல், தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை உண்டாக்குவது தொடர்பாக இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
முதல் கட்டமாக வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று மாலை டெல்லி வருகிறார். வரும் 13 ஆம் தேதி பிரதமர் மன்மோகன்சிங்கை ராஜபக்சே சந்தித்துப் பேசுகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்களையும் ராஜபக்சே சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் போர் குறித்தும், அங்குள்ள தமிழர்கள் போரினால் பாதிக்கப்படாமல் இருக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், இந்தியத் தலைவர்களிடம் ராஜபக்சே விளக்குவார் எனத் தெரிகிறது.
உடனடியாக போர் நிறுத்தத்தை இலங்கை மேற்கொள்ள வேண்டும், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என தமிழக கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
தமிழக கட்சிகளின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் செய்யத் தயாராக இருப்பதாக புலிகளும் அறிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் இலங்கை அதிபரின் இந்தியப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications