நெல்லை டிஐஜியை மாற்ற புதிய தமிழகம் கோரிக்கை
நெல்லை: நெல்லை சரக டிஐஜியை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் மாநில மாணவரனி செயலாளர் பாஸ்கர், மாநில இளைஞரணி செயலாளர் மதுரம் பாஸ்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் கண்மணி மாவீரன் ஆகியோர் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது, கடந்த 2ம் தேதியன்று மதுரை மாவட்டம் உத்தபுரத்திலிருந்து திரும்பிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் காரை ஒரு கலவர கும்பல் தாக்கியுள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. இது தொடர்பாக கடந்த 4ம் தேதி கோட்டைபட்டி கிராமத்தில் சாலை மறியல் நடந்த போது துப்பாக்கி சூட்டில் சுரேஷ் என்ற வாலிபர் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சூடு குறித்து பணியில் மாவட்ட அமர்வு நிதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சித் தொண்டர்களை விடுதலை செய்ய வேண்டும். சங்கரன்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் மீது வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றதாக கட்சியை சேர்ந்த 7 இளைஞர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.
இதுபோன்ற பொய் வழக்குகளை புதிய தமிழகம் கட்சியினர் போட்டு காவல் துறை அதிகாரிகள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர். எனவே எங்கள் மீது பொய் வழக்கு புனையும் காவல்துறை அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக நெல்லை டிஐஜி கண்ணப்பனை இடமாற்றம் செய்ய வேண்டும்.
நேர்மையான அதிகாரிகளை தென்மாவட்டங்களில் நியமனம் செய்ய வேண்டும். இல்லையேனில் புதிய தமிழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications